திடீரென உயர்ந்த கியாஸ் சிலிண்டர் விலை… தட்டுப்பாடு ஏற்படுமா?

ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் சூழலால் காரணமாக வீடு, வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழலில்
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ளது.
வீடு, வணிக பயன்பாட்டு கியாஸ் சிலிண்டர் விலை நாடு முழுவதும் திடீரென உயர்ந்துள்ளது.

அதன்படி, வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை 60 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் இதுவரை 869 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர், இனி 929 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இதேபோல், வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை 115 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஒரு வணிக சிலிண்டரின் விலை 2,044 ரூபாயாகவும், டெல்லியில் 1,883 ரூபாயாகவும், மும்பையில் 1,835 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. முன்னதாக, கடந்த 1-ம்தேதி 30 ரூபாய் விலை உயர்த்தப்பட்ட சூழலில், தற்போதை விலை ஏற்றத்துடன் சேர்த்து வணிக சிலிண்டரின் விலை ஒரே வாரத்தில் 145 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நாட்டில் போதுமான எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் கையிருப்பு 8 வாரங்களுக்கு பயன்படுத்தும் வகையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் ரஷ்யாவிலிருந்து தற்காலிகமாக எண்ணெய் இறக்குமதி செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *