
நீலாங்கரையில் உள்ள வீட்டில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
விவகாரத்து கோரி மனு
தமிழக வெற்றிக் கழகக் தலைவர் நடிகர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சமீபத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறி விஜய் தொடா்பில் இருந்து வருவதால், 2021-ம் ஆண்டு முதல் நான் தனியாக வசித்து வருகிறேன். இது சமூக வலைதளங்கள் மற்றும் எங்களது நட்பு வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளதால் நானும் என் குழந்தைகளும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறோம்.
உடன்பாடு எட்டப்படவில்லை
இந்த விவகாரத்தில் சுமுகத் தீா்வு காண 2024, ஆகஸ்ட் முதல் 2025, பிப்ரவரி மாதங்களுக்கு இடையே பலமுறை சட்டரீதியாக விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பினேன். விஜய்யை இரண்டு முறை நேரில் சந்தித்தும் இதுதொடா்பாக பேசினேன். இறுதியாக 2025, நவம்பா் 9-ஆம் தேதி அவருடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தினேன். ஆனால், பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் வேறு வழியின்றி நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டது ஆனால், இந்த விஷயம் குறித்து விஜய் எந்த கருத்தும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டும்
இந்த நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் இல்ல திருமண நிகழ்வு நேற்று முன் தினம் நடைபெற்றது. அதில் நடிகை த்ரிஷாவும், நடிகர் விஜய்யும் , ஒரு நிற பட்டாடையில் கலந்துகொண்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில், விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், நீலாங்கரை வீட்டில் அனுமதிக்க விஜய் மறுக்கிறார் என குற்றம்சாட்டியுள்ளார். மேலும், விவாகரத்து வழக்கு முடியும் வரை,தன்னை சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் தங்கியிருக்க விஜய் அனுமதிக்க வேண்டும். தவெக தலைவர் விஜய் தங்கியிருக்கும் வீட்டில் எனக்கும் சரிபாதி பங்கு இருக்கிறது. விவாகரத்து முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை வீட்டில் அனுமதிக்க வேண்டும். நீலாங்கரை வீட்டில் அனுமதிக்க கோரினால், வழக்கறிஞர் மூலமாக விஜய் தரப்பினர் மிரட்டுவதாக சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் மீது அவரது மனைவி சங்கீதா அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுப்பி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



