சென்னையில் வணிக சிலிண்டர் வினியோகம் நிறுத்தம்: ஓட்டல்கள் மூடும் அபாயம்

சென்னையில் வணிக சிலிண்டர் வினியோகத்தை நிறுத்த உள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டுப்படைகள் கடந்த 24-ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வினியோககம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக, இந்தியாவுக்கு எரிவாயு வரும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிலவும் பதற்றத்தால் இறக்குமதி குறைந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் வணிகப் பயன்பாட்டு (19 கிலோ) சிலிண்டர் விநியோகத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. சென்னையின் மணலியில் உள்ள ஐஓசி சிலிண்டர் நிரப்பும் ஆலையில் இருந்து வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், ஓட்டல்கள்,. விடுதிகள் திறப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் உணவு விலை கடுமையாக உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசு வீட்டு உபயோக முன்னுரிமை கொள்கையை அமல்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகத்தை நிறுத்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *