போர் பதற்றம்… ஆப்கானிஸ்தான், இலங்கை கிரிக்கெட் போட்டி ரத்து

ஆப்கானிஸ்தான் – இலங்கை இடையேயான டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகள் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருந்தன. இந்தத் தொடரின் டி20 போட்டிகள் சார்ஜா கிரிக்கெட் திடலில் மார்ச் 13, 15, 17 ஆகிய தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் துபாய் பன்னாட்டு கிரிக்கெட் திடலில் மார்ச் 20, 22, 25 ஆகிய தேதிகளிலும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் நடத்தும் தாக்குதல் தொடர்வதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது. ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. ஈரான் நடத்திய தாக்குதலில் துபாய் விமான நிலையம் பலத்த சேதமடைந்துள்ளது. இந்த போர் பதற்றம் காரணமாக துபாயில் ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகள் விளையாடவிருந்த ஒருநாள், டி20 தொடர் ஒத்திவைக்கப்படுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,4, “ஆப்கானிஸ்தான் – இலங்கை இடையேயான வெள்ளைப் பந்து தொடர் ஒத்திவைக்கப்படுகிறது. விமான சேவை, போர்ப் பதற்றம் போன்றவைகள் காரணமாக இந்தத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *