சி ஏ தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த மதுரை மாணவி… சு.வெங்கடேசன் பாராட்டு!

இந்திய பட்டய கணக்காளர் முதல்நிலைத் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற மதுரையைச் சேர்ந்த மாணவி லோகப்பிரியாவிற்கு சு.வெங்கடேசன் எம்.பி பாராட்டு தெரிவித்தார்.

இந்திய பட்டய கணக்காளர் முதல்நிலைத் தேர்வில் 109694 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் 21099 பேர் வெற்றி பெற்றனர். இதில் தேசிய அளவில் மதுரை ஹார்விபட்டியைச் சேர்ந்த மாணவி பி.பி.லோகப்பிரியா முதலிடம் பிடித்தார். இவர், மதுரை அரபிந்தோ மிரா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொதுத் தோ்வில் 600-க்கு 598 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றவா்.

இதையடுத்து, சென்னையில் உள்ள பட்டயக் கணக்காளா் பயிற்சி மையத்தில் பி.பி.லோகப்பிரியா பயிற்சி பெற்றாா். கடந்த ஜனவரி மாதம் இந்திய பட்டய கணக்காளா் நிறுவனம் சாா்பில் நடத்தப்பட்ட பட்டயக் கணக்காளா் அடிப்படைத் தோ்வை எழுதினாா். இதில் லோகப்பிரியா 400-க்கு 366 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் முதலிடம் பெற்றாா். அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். அப்போது பி.பி.லோகப்பிரியாவின் பெற்றோர் பழனிக்குமார், பத்மா உடனிருந்தனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *