கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்ட மதூர் சத்யா…. திமுகவில் இணைகிறாரா?

மதூர் சத்யா

பாலியல் புகாரின் அடிப்படையில் ஊடகவியலாளர் மதூர் சத்யா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பாலியல் புகார்
ஊடகவியலாளர் மதூர் சத்யா, வலைதளங்களில், ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இவர் மீது பாலியல் புகார் கிளம்பியுள்ளது. இதன் காரணமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவடட் செயலாளர் எஸ்.கே.சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய கலாச்சார நட்புறவுக்கழகம் ஆகியவற்றில் இருந்து மதூர் சத்யா நீக்ம் செய்யப்ட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென் சென்னை மாவட்டம் சார்பில் சென்னை பெருநகர மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

போலீஸில் புகார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாதிக்கப்பட்ட பெண் கடந்த மார்ச் 13-ம் தேதி மாலை இ மெயில் மூலம் மதூர் சத்யா மீது பாலியல் புகார் அனுப்பியிருந்தார். இந்தக் கடிதம் தொடர்பாக எங்கள் கட்சியின், தென் சென்னை மாவட்ட குழு கடந்த மார்ச் 14-ம் தேதி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளான அகில இந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய கலாச்சார நட்புறவுக்கழகம் அமைப்புகளில் மதூர் சத்யா வகித்து வந்த பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார். மேலும் பதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகவும் காவல்துறை சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க கோரி காவல்துறையில் புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. மதூர் சத்யாவிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய கலாச்சார நட்புறவுக்கழக தோழர்கள் அனைவரும் அமைப்பு ரீதியாக எந்த தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது” என்று கூறியுள்ளார்.

உண்மையல்ல
இந்த நிலையில், மதூர் சத்யா திமுகவில் இணைவார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நீக்கம் நடவடிக்கை குறித்து மதூர் சத்யா தனதுஎக்ஸ் பக்கத்தில், “கட்சி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி மூலம் தான் என் மீதான குற்றச்சாட்டுகளை தெரிந்து கொண்டேன். என் தரப்பு கருத்துகளை சொல்ல வாய்ப்பு வழங்கவில்லை. என் வாழ்க்கையில் யாரிடமும் அநாகரீகமாக நடந்த கொண்டதில்லை. அவர்களின் ஒப்புதலுக்கு பிறகு தான் உறவை தொடர்ந்துள்ளேன். நான் மௌனமாக இருப்பதால் என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்றாகிவிடாது. இந்த நிலையில் நான் அப்பாவி என்று நீங்கள் நம்புவது கடினமாக இருக்கும். இனி நான் என்ன சொன்னாலும் அது எனக்கு உதவ போவதில்லை. என்னை நம்பிய கட்சிக்கும், தோழர்களுக்கும் சட்டரீதியாக நிரூபிப்பேன்” என்று கூறியுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *