
நயினார் நாகேந்திரன்
தவெக மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா யாரென்றே தெரியாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை இன்று (மார்ச் 19) சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எதிர்க்கட்சியினரை வருமான வரித்துறை திடீரென இன்று வந்து வழக்குப் போட்டு மிரட்டுவது மாதிரி சொல்லலாம். ஆனால்,, வழக்கு போட்டு 5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதே. கடந்த தேர்தலுக்கு முன்பே எல்லோர் மீதும் வழக்கு உள்ளது. அதற்கும் பாஜக மிரட்டுவதாகச் சொல்ல முடியுமா? விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே திமுக அமைச்சர்கள் பலர் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வழக்குகள் உள்ளன. பத்து வருடங்களுக்கு முன்பாக வழக்குகளும் உள்ளன. இந்த நிலையில், மிரட்டுகிற மாதிரி என்று சொன்னால் எப்படி பொருத்தமாக இருக்கும்?.

ஆதவ் அர்ஜுனா
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் என்ற முறையில் யாரோடும் இதுவரை தேர்தல் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அவர்களும் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை”. என்று நயினார் நாகேந்திரன் கூறினார். 96 தொகுதிகள், இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி ஆஃபர் கொடுத்ததாக ஆதவ் அர்ஜூனா கூறியது பொய்யா என்று ஒரு செய்தியாளர் வினா எழுப்பினார்.” நீங்கள் சொல்லும் நபரையே எனக்குத் தெரியாது” என்று நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்
‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாததற்கு காரணத்தை சினிமா துறையில் உள்ளவர்கள் யாரிடமாவது கேட்க வேண்டும். மேலும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை எல்லாமே தனி அமைப்புகள். அதில் சம்பந்தப்பட்டிருந்தால் மட்டுமே தொடர்புபடுத்த முடியும். சம்பந்தமில்லாத ஒரு நபரை எப்படி தொடர்புபடுத்த முடியும்?” என்றார்..



