பெங்களூருவில் சுற்றி வளைத்த போலீஸ்… மதூர் சத்யா கைது!


பெங்களூருவில் சுற்றி வளைத்த போலீஸ்... மதூர் சத்யா கைது!
மதூர் சத்யா

பாலியல் புகாரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மதூர் சத்யா பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் புகார்
யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமான ஊடகவியலாளர் மதூர் சத்யா. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான இவர் மீது சில நாட்களுக்கு முன்பு பாலியல் புகார் எழுந்தது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென் சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.கே.சிவா விடுத்த அறிக்கையில், ” இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மின்னஞ்சலுக்கு கடந்த 13- ம் தேதி மதூர் சத்யா மீது பாலியல் புகார் கடிதம் அனுப்பி இருந்தார். அதன் அடிப்படையில், கட்சியின் தென் சென்னை மாவட்ட குழு கடந்த 14-ம் தேதி அன்று நடைபெற்ற கூட்டத்தில் விவாதித்து, சில முடிவுகளை எடுத்தது.

காவல் ஆணையரிடம் புகார்
அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளான இளைஞர்பெருமன்றம், இந்திய கலாச்சார நட்புறவு கழகம் ஆகிய அமைப்புகளில் இருந்து மதூர் சத்யா வகித்து வந்த பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், கடந்த 15ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மதூர் சத்யாவிடம் அமைப்பு ரீதியாக எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெங்களூருவில் கைது
இந்த பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரின் அடிப்படையில், சென்னை மாநகர போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், மதூர் சத்யாவை பெங்களூரில் வைத்து நேற்று கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அவரை சென்னைக்கு இன்று அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *