நடிகர் சூர்யா தான் எனக்கு இன்ஷ்பிரேஷன்… என்டிஆர் விருது விழாவில் சிரஞ்சீவி நெகிழ்ச்சி

நடிகர்கள் சிரஞ்சீவி,சூர்யா, அல்லு அர்ஜுன்/

நடிகர் சூர்யா தான் எனக்கு இன்ஷ்பிரேஷன் என்று நடிகர் சிரஞ்சீவி கூறியுள்ளார்.

கடந்த 2025-ம் ஆண்டிற்கான தெலங்கானா கட்டர் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா உகாதி தினமான நேற்று (மார்ச் 19) நடைபெற்றது. இதில் சினிமாவில் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக என்டிஆர் நேஷனல் அவார்டு நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது.

அகரம் பவுண்டேசன்
இதையொட்டி சிரஞ்சீவிஅளித்த பேட்டியில், ” ரத்த தானம் மற்றும் கண் தானம் மூலம் லட்சக்கணக்கான உதவி செய்து வருகிறேன். மக்கள் என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்ததால், அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சேவைகளை செய்ய ஆரம்பித்தேன். எதிர்காலத்தில், ஏழை மக்களுக்கு இலவசக் கல்வி வழங்க விரும்புகிறேன். ஒரு குடும்பத்தில் ஒருவர் கல்வி கற்றால், அந்தக் குடும்பம் முழுவதுமே ஒரு நல்ல நிலையில் இருக்கும். இந்த எண்ணத்திற்கு, காரணம் நடிகர் சூர்யா. அவர் தமிழ்நாட்டில் பல சந்தர்ப்பங்களில் அகரம் என்ற அமைப்பை தொடங்க சிரஞ்சீவிதான் காரணமும், உத்வேகமும் என்று கூறியிருக்கிறார். கல்விக்காக அவர் செய்யும் நலப்பணிகள் எனக்கு மிகுந்த ஊக்கமளிக்கின்றன.

எனக்கு இன்ஷ்பிரேஷன்
நான் அவரிடம், `ஒரு காலத்தில் நான் உங்களுக்கு இன்ஷ்பிரேஷனாக இருந்தேன், இப்போது நீங்கள் எனக்கு இன்ஷ்பிரேஷன் ஆகிவிட்டீர்கள்’ என கூறுவேன். ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்கள் மற்றும் பிற இடங்களிலும் உள்ள ஏழை மக்களுக்கும், நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள மாணவர்களுக்கும் கல்விக்கான எனது சேவையை வழங்க, உங்களிடமிருந்து இந்தச் செயல்முறையைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனவே என் எதிர்கால திட்டம் ஏழை மற்றும் தேவை உள்ள நபர்களுக்கு கல்வி அளிப்பதாகும்” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *