புதுச்சேரி பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

புதுச்சேரியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக, லஜக கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளனன. புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் 16, பாஜக 10, அதிமுக 2, லஜக 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில் புதுச்சேரியில் பாஜக போட்டியிடும் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வேட்பாளர்கள் விவரம் வருமாறு:

மண்ணாடிப்பட்டு – ஏ. நமச்சிவாயம்
ஊசுடு (எஸ்.சி) – இ. தீப்பாய்ந்தான்
காலாப்பட்டு – பி.எம்.எல். கல்யாணசுந்தரம்
ராஜ் பவன் – வி.பி. ராமலிங்கம்
முதலியார்பேட்டை – ஏ. ஜான்குமார்
மணவெளி – ஏம்பலம் ஆர். செல்வம்
திருநள்ளாறு – ஜி.என்.எஸ். ராஜசேகரன்
நிரவி – டி.ஆர். பட்டினம் – டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்
மாஹே – ஏ. தினேஷன்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *