திமுகவிற்காக உயிரைக் கொடுத்து வேலை செய்வோம்: திவ்யா சத்யராஜ் பேட்டி

நடிகர் சத்யராஜிடன் திவ்யா சத்யராஜ்.

நாங்கள் அனைவரும் டிஎம்கே வாரியர்ஸ். சீட் இருக்கோ, இல்லையோ திமுகவிற்காக எங்களுடைய உயிரைக் கொடுத்து வேலை செய்வோம் என்று திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார். இதற்கான வேட்பாளர் நேர்காணலிலும் கலந்து கொண்டார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மக்களுக்காக வேலை செய்யக்கூடிய கட்சி திமுக மட்டும் தான். மக்கள் பிரச்சனைகளை பற்றி புரிதல் இருக்கக்கூடிய கட்சி அது திமுக மட்டும்தான். திமுகவில் எனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன். குறிப்பாக கல்வியில் இருந்து சுகாதாரம், பெண்கள் என அனைத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பேன். நான் இன்று களத்திற்கு வரவில்லை. தொண்டு நிறுவனத்தின் மூலம் 5 ஆண்டுகளாக மக்கள் நலனில் இருந்து வருகிறேன். நான் அனைவருக்கும் பரிட்சையமான முகம் தான்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைந்த போது.

எனக்கு போட்டியிட சீட் கிடைக்க வேண்டும் என்பது முக்கியம் கிடையாது. நாங்கள் அனைவரும் திமுகவிற்கு வேலை செய்கிறோம். நாங்கள் அனைவரும் டிஎம்கே வாரியர்ஸ். சீட் இருக்கோ.. இல்லையோ.. திமுகவிற்காக எங்களுடைய உயிரைக் கொடுத்து வேலை செய்வோம். தவெகவிற்கு பயம் விட்டது.அதனால் தான் திமுகவைத் தொடர்ந்து எதிரி என விமர்சித்து வருகிறது” என்றார். நீங்கள் எந்த தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு. ” நான் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன்” என்றார் திவ்யா சத்யராஜ்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *