
புதுச்சேரியில் போட்டியிடும் 13 வேட்பாளர்கள் பட்டியலை திமுக இன்று வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 16, திமுக 12, விசிக-1, சிபிஐ 1 இடத்தில் போட்டியிட தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரியில் போட்டியிடும் 13 திமுக வேட்பாளர் பட்டியலை திமுக இன்று (மார்ச் 24) வெளியிட்டுள்ளது. அதன்படி, வில்லியனூர் – இரா.சிவா, மங்கலம் – எஸ்.எஸ்.ரங்கன், திருபுவனை – பி.அங்காளன், பாகூர் -ஆர்.ஆர்.செந்தில்குமார், முதலியார்பேட்டை – லி.சம்பத், உப்பளம் – அனிபால்கென்னடி, உருளையன்பேட்டை – எஸ்.கோபால், நெல்லித்தோப்பு வே.கார்த்திகேயன், ராஜ்பவன் – விக்னேஷ் கண்ணன், காலாப்பட்டு – ஏ.செந்தில், கதிர்காமம் – ப.வடிவேலு, காரைக்கால் தெற்கு -ஏ.எம்.எச்.நாஜிம், நிரவி டி.ஆர்.பட்டினம் – எம்.நாக தியாகராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மூன்று தொகுதிகளில் தனித்தே போட்டியிடும் என திருமாவளவன் இன்று(மார்ச் 24) காலை அறிவித்திருந்தார். இந்த நிலையில் திமுக கூட்டணியில் உழவர்கரை தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது



