
எடப்பாடி பழனிசாமி
பாஜக, பாமக, அமமுக போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக, பாமக, அமமுக, ஐஜேகே, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளுக்கு எந்தந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்ற விவரத்தை எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) அறிவித்தார்.
இதன்படி ” மயிலாப்பூர்,தளி,மொடக்குறிச்சி,உதகமண்டலம்,அவிநாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வகோட்டை,புதுக்கோட்டை,
திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை, ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி) ஆகிய தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
சேலம் மேற்கு, தர்மபுரி,பென்னகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாச்சலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோயில், கீழ்வேளூர், பெரம்பூர், சேலம் வடக்கு, அம்பத்தூர் ஆகிய தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.இதே போல தாமரை சின்னத்தில் ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய தொகுதிகளில் தமாகா போட்டியிடுகிறது.
பெரியகுளம், மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர், நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், திருச்சிராப்பள்ளி மேற்கு, சைதாப்பேட்டை, பூந்தமல்லி, மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளில் அமமுக போட்டியிடுகிறது. ராஜபாளையத்தில் ஜான் பாண்டியனி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுகிறது. பல்லாவரம், குன்னம் ஆகிய தொகுதிகளில் ஐஜேகே, கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் புரட்சி பாரதம் போட்டியிடுகிறது. எஞ்சிய அனைத்து தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடும். விரைவில் நாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்படும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.



