தேர்தல் விதிகளை மீறிய நெடுஞ்சாலைத்துறை… தேர்தல் ஆணையத்திடம் பரபரப்பு புகார்

இந்திய தேர்தல் ஆணையம்.

தேர்தல் விதிகளை நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் மீறியுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் சிறப்பு பார்வையாளர் பிரதாப் சிங்கிற்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் சிறப்பு பார்வையாளர் பிரதாப் சிங்கிற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மு.மாரிமுத்து அனுப்பியுள்ள மனுவில்,” நெடுஞ்சாலைத் துறை உதவிக்கோட்ட பொறியாளர், உதவிப் பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் ஆகியோருக்கு பொது பணியிட மாறுதல் கடைசிவரை வழங்காமலே தேர்தல் விதி தமிழக அரசால் புறக்கணிப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் பொறியாளர்களுக்கு கண்டிப்பாக பணியிட மாறுதல் நெடுஞ்சாலைத்துறை அரசுச் செயலாளர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் ஆகியோர் செய்திருக்க வேண்டும். அப்போதுதான் விதிப்படி தேர்தல் பணிகளைப், பொறியாளர்கள் செய்வது சரியாக இருக்கும்.

ஆனால், வெளிப்படையான விதிகளை நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் மீறியுள்ளது. இதன் மீது உரிய விசாரணை செய்திட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *