இருவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யுங்கள்… காதல் தம்பதி எழுதி வைத்த கண்ணீர் கடிதம்

மதுரையில் ஆட்டோ டிரைவர், காதல் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்தவர் அருண்(28). இவருக்கும் செல்லூர் பகுதியைச் சேர்ந்த பிரியா(26) என்பவரும் 2 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விபத்தில் அருணனுக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் ஆட்டோ ஓட்ட முடியாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில், இவரது மனைவி பிரியா, சிம்மக்கல் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

மருத்துவச் செலவு, குடும்பச் செலவு உள்ளிட்டவற்றிக்கு பணம் இல்லாமல் தவித்த அருண், கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார். இதனால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மனைவியுடம் புலம்பி வந்துள்ளார். உங்களுடன் நானும் தற்கொலை செய்கிறேன் என்று பிரியா கூறியுள்ளார். இந்த நிலையில், இவர்கள் இருவரும் ஊமச்சிகுளம் சாஸ்திரி தெருவில் உள்ள வீட்டில் தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து ஊமச்சிகுளம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், தம்பதியரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர்களது வீட்டில் சோதனையிட்ட போது ஒரு கடிதம் கிடைத்தது. அதில், “எங்கள் சாவிற்கு யாரும் காரணம் இல்லை. எங்கள் இருவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யுங்கள். எங்களுடைய இறப்பை காரணம் காட்டி கோயில் திருவிழாவை
நிறுத்தி விட வேண்டாம்” என்று எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீஸர், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *