அடுத்தடுத்து 3 தோல்விகளைச் சந்தித்த சிஎஸ்கே அணி…. காரணம் யார் ?

மூன்றாவது போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது. இதற்கு யார் காரணம் என அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

பெங்களூருரில் சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி சின்னச்சாமி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சால்ட் 46 ரன்கள், விராட் கோலி 28 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். அதிரடியாக ஆடிய படிக்கல் 50 ரன்களையும், படிதார் 48 ரன்களையும், எடுத்தனர். குறிப்பாக ஆர்சிபி அணியின் டிம் டேவிட், சிஎஸ்கே வீரர்களின் பந்துகளை துவம்சம் செய்தார். அவர் 25 பந்துகளில் 70 ரன்களை குவித்தார். இதனால் 251 ரன்கள் சிஎஸ்கேவிற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

,இந்த இமாலய இலக்கை சிஎஸ்கே களமிறங்கியது. ஆனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சன் 9 ரன்கள், ஆயுஷ் மாத்ரே 1 ரன், கேப்டன் ருதுராஜ் 7 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து அவுட்டானார்கள். ஆனால், சர்ப்ராஸ் கான் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். அவர் 28 பந்துகளில் 8 பவுண்ட்ரி, 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். கார்த்திக் சர்மா 6 ரன்கள், ஷிவம் துபே 18 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

இதன் பின் களமிறங்கிய பிரசாந்த் வீர், ஜேமி ஓவர்டன் அதிரடி காட்டினர். இதனால் இந்த ஜோடி 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 43 ரன்கள் எடுத்த பிரசாந்த் அவுட்டானார். தனி ஒருவனாக ஓவர்டன் போராடினார். அவர் 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவுட்டானார். 19.4 ஓவர்களில் 204 ரன்கள் எடுத்து சிஎஸ்கே ஆல் அவுட்டானது. இதனால், ஆர்சிபி அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்சிபி அணி சார்பில் புவனேஷ்குமாபர் 3 விக்கெட்டுகளையு, அபினந்தன் ஜேக்கப் டஃபி தலா 2 விக்கெட்டுகளையும்,, சுயாஷ் சர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். சென்னை அணி இந்த தொடரில் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்திருந்தது. மூன்றாவது போட்டியில் ஆர்சிபியிடம் தோல்வியடைந்துள்ளது. ஆர்சிபி அணிக்கு இரண்டாவது வெற்றியாகும். இந்த நிலையில், இந்த மோசமான தோல்விக்கு நானே முழுமையாக பொறுப்பேற்று கொள்கிறேன் என்று சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *