சென்னையில் பிரபல சீரியல் நடிகை தற்கொலை… நடந்தது என்ன?

பிரபல தொலைக்காட்சி நடிகை சுபாஷினி பாலசுப்ரமணியன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கயல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த சுபாஷினி பாலசுப்ரமணியம், இலங்கையைச் சேர்ந்தவர். இவரது கணவர் பிப்பினுடன் பெங்களூருவில் வசித்து வந்தார். ஆனால், சீரியல்களில் நடிப்பதற்காக சென்னை போரூரில் அய்யப்பன்தாங்கலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். சமூக வலைதளங்களில் மிகவும் செயல்பாட்டுடன் இருந்த சுபாஷினியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 6 லட்சமாகும்.

சுபாஷினி நேற்று இரவு அவரது கணவருடன் வீடியோ கால் மூலம் பேசிக் கொண்டிருந்த போது குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த சுபாஷினி தனது குடியிருப்பில் தூக்கிட்டு இன்று (ஏப்ரல் 6) தற்கொலை செய்து கொண்டார். அவரது திடீர் மரணம் அவரது குடும்பத்தினரையும், சகநடிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அவரது உடலைக் கைப்பற்றி போலீஸார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 12-ம் தேதி சுபாஷினியின் பிறந்த நாளாகும். அதே போல ஏப்ரல் 21-ம் தேதி அவரது இரண்டாவது திருமண ஆண்டும் வரவிருந்தது. இந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டது தொலைக்காட்சி வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *