
ராமநாதபுரம், மேற்கு தொடர்ச்சி. டெல்டா மாவட்டங்களில் ஏப்ரல் 20-ம் தேதி மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை வரை அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெயிலுக்கு இதமாக மழை பெய்யும் என்ற தகவலையும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அசாம் முதல் தென் தமிழ்நாடு வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவகிறது. இதனால், ராமநாதபுரம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மற்றும் கடலோர பகுதிகளில் ஏப்ரல் 20-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் . அதே சமயம், தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை வரை அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



