
தமிழ்நாடு முழுவதும் 85.11 சதவீதம் வாக்குப்பதிவுகள் பதிவாகியுள்ளது. இதில் கரூர் தொகுதியில் 93.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) காலை தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என நான்கு முனை போட்டி நிலவியது. இந்த தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில், 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவர்.. இந்த தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் 85.11 சதவீதம் வாக்குப்பதிவுகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற எஸ்ஐஆர் பணிகள் காரணமாக முதல்முறையாக 85.11 சதவீதம் வாக்குப்பதிவுகள் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை விட சுமார் 29 லட்சம் வாக்குகள் கூடுதலாக பதிவாகியுள்ளது. அதாவது 11 சதவீத வாக்குகள் கூடுதலாகியுள்ளது.
அதிகபட்சமாக தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் 93.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் 93.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 4 கோடியே 83 லட்சத்து 69 ஆயிரத்து 65 வாக்குகள் தோரயமாக பதிவாகியுள்ளது இளைஞர்கள் ஆர்வமாக வாக்களித்தால் தான் இந்த சதவீதம் உயர்ந்திருக்கிறது. மாவட்ட ரீதியாக வாக்குகள் பதிவான விவரம் வருமாறு
திருவள்ளூர்- 82.86%
தூத்துக்குடி- 79.75%
திருச்சிராப்பள்ளி- 85.04%
திருநெல்வேலி- 77.44%
திருப்பத்தூர்- 87.67%
திருப்பூர்- 88.22 %
திருவண்ணாமலை- 88.06%
வேலூர்- 87.74%
விழுப்புரம்- 87.67%
விருதுநகர்- 84.15%
மயிலாடுதுறை- 81.01%
நாகப்பட்டினம்- 85.35%
நாமக்கல்- 89.46%
பெரம்பலூர்- 85.17%
புதுக்கோட்டை- 83.37%
இராமநாதபுரம்- 76.18%
ராணிபேட்டை- 88.58%
சேலம்- 90.19%
சிவகங்கை- 76.07%
தென்காசி- 81.48%
தஞ்சாவூர்- 80.07 %
நீலகிரி- 78.43 %
தேனி- 80.85 %
திருவாரூர்-82.89%
அரியலூர்- 85.33 %
செங்கல்பட்டு- 84.26 சதவீதம்
சென்னை- 83.15%
கோவை- 84.40%
கடலூர்- 84.57%
தர்மபுரி- 89.87%
திண்டுக்கல்- 88.29%
ஈரோடு- 89.77%
கள்ளக்குறிச்சி- 86.89%
காஞ்சிபுரம்- 86.81%
கன்னியாகுமரி- 75.46%
கரூர்- 91.92%
கிருஷ்ணகிரி- 84.65%
மதுரை- 80.20%



