
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாகத் வாக்குப்பதிவு நடைபெற்றது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என நான்கு முனைப் போட்டி நிலவிய நிலையில், பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. அங்கு வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகளை எண்ணும் பணி இன்று (மே 4) தொடங்குகிறது.
காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணுவதுடன் பணிகள் தொடங்குகின்றன. தேர்தல் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர் முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். அவர்களின் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்படும். அதைத் தொடர்ந்து, காலை 8:30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இதில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் 9 மணி அளவில் தெரியவரும் என்று தெரிகிறது..



