தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக முன்னணி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தபால் வாக்குகளில் திமுக 58 இடங்களில் முன்னணி பெற்றுள்ளது. தவெக இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாகத் வாக்குப்பதிவு நடைபெற்றது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என நான்கு முனைப் போட்டி நிலவிய நிலையில், பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

அங்கு வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகளை எண்ணும் பணி இன்று (மே 4) தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் திமுக 58, அதிமுக 21, தவெக 31தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னணி பெற்றுள்ளனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *