
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்துள்ள விஜய்க்கு ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் தான் சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே 111 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலை வகிக்கின்றன. அத்துடன் தற்போதைய கணக்கின்படி ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளை தவெக பெற்றுள்ளது.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு ஆந்திரா மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “எனது அன்பிற்குரிய சகோதரர் விஜய்க்கு ஒரு சிறப்பான மற்றும் மனமார்ந்த பாராட்டுக்கள். உங்களது முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பது மிகவும் வியக்கத்தக்கது. மக்கள் பணியின் இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் உங்களுக்கு மிகுந்த மனவலிமையும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறேன். இறைவனது அருள் உங்களோடு இருக்கட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.




Best wishes