இன்று பிளஸ் 2 தேர்வு முடிவு … எஸ்எம்எஸ்ஸில் ‘ஹாய்’ சொன்னால் உடனே ரிசல்ட்!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். அதே போல பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை கடந்த மார்ச் 11-ம் நடைபெற்ற தேர்வினை சுமார் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 மாணவர்களும், 13 ஆயிரத்து 744 தனித்தேர்வர்களும் எழுதினர்.

இந்த நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9.30 மணியளவில் வெளியாகிறது. தேர்வு முடிவுகள் வெளியானதும் பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவ, மாணவியர் அறிந்து கொள்ளலாம். மேலும் எஸ்எம்எஸ் மூலமாகவும் முடிவுகளை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக மின் ஆளுமை முகமையின் உதவியுடன், இந்த ஆண்டு முதன்முறையாக வாட்ஸ்அப் மூலம் முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு மாணவ, மாணவியர் “Hi” என்ற குறுஞ்செய்தி அனுப்பிபினால் தேர்வு முடிவுகள் வாட்ஸ்அப்பிற்கே உடனடியாக வந்துவிடும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *