
அதிக வட்டி தருவதாக 20 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருப்பவர் சரவணன். இவர் அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி 20 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பெற்று மோசடி செய்ததாக நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், தலைமறைவான தமிழக வெற்றிக் கழக நிர்வாகி சரவணனை தேடி வந்தனர்.இந்த நிலையில், வடமாநிலத்தில் பதுங்கியிருந்த சரவணனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..



