மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

நிலப்பிரச்னை தொடர்பாக மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளித்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட மாதரசனபள்ளியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். மாற்றுத்திறனாளியான இவருக்கும், சிலருக்கும் நிலப்பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று (மே 18) நிலப்பிரச்னை சம்பந்தமாக ஒரு தரப்பினர் வெங்கடேசனை தாக்கியதாக தெரிகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதாக வெங்கடேசன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்அலுவலகத்திற்கு இன்று காலை வந்தார். அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி வெங்கடேசன் தீக்குளித்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தண்ணீரை ஊஊற்றிதீயை அணைந்ததனர். இதனையடுத்து படுகாயமடைந்த மாற்றுத்திறனாளி வெங்கடேசனை 108 ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனு கொடுக்க வந்தமாற்றுதிறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *