
சமூகநீதித்துறை அமைச்சராக வன்னி அரசும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக ஏ.எம்.ஷாஜகானும் பொறுப்பேற்றுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று (மே 22) விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்கான விழா ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. வந்தே மாதரம், தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின் விழா தொடங்கியது.

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு, ஐயூஎம்எல் கட்சியைச் சேர்ந்த பாபாநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவி பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.,
இதனையடுத்து ஏ.எம்,ஷாஜகான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும், வன்னி அரசு சமூக நீதித்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டனர்.



