நெருப்பாய் கொதிக்கும் தமிழ்நாடு…மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதல்

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடைகாலம் என்றாலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இந்த ஆண்டு 2026 கோடைக்காலம் துவங்கியதில் இருந்தே வெயிலின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் தொடங்கிய வெயிலின் தாக்கம் மே மாதத்தில் உச்சத்தை தொட்டது. தமிழ்நாட்டில் வேலூர், கரூர், ஈரோடு, திருச்சி போன்ற உள்மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டிய வெப்பநிலை பதிவாகியுள்ளது.

ஆனால், சென்னையில் 41 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வெயிலின் தாக்கத்தால் மக்களின் உடல்நலம், விவசாயம், பொருளாதாரம் பாதிக்கிறது. ஹீட்வேவ் பாதிப்பால் வயதானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக தமிழக அரசும் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி நீர், மோர், பழச்சாறு உட்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வெளியில் செல்லும்போது தலைக்கு தொப்பி அல்லது குடை பயன்படுத்தவும், பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே வராமல் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், வெயிலின்தாக்கத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளிப்புற பயணங்களை தவிர்க்க வேண்டும். வெயிலில் நீண்ட நேரம் கடும் உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பில் ஈடுபட வேண்டாம். மது, தேநீர், காபி, குளிர்பானங்கள், அதிக சர்க்கரை கொண்ட பானங்களை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *