ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்… திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தவர் இளையராஜா. இவர் 1976-ம் ஆண்டு தேவராஜ்- மோகன் இரட்டையர்கள் இயக்கிய ‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். அவருக்கு 2010-ம் ஆண்டு பத்பூஷன், 2018-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. அவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்பட்டு வருகிறது.மாரி செல்வராஜ் இயக்கும் மஞ்சணத்தி படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

ஆசியாவிலேயே முதல் முறையாக சிம்பொனி இசையை இசையமைத்த இளையராஜாவின் 83வது பிறந்த நாள் விழா இன்று (ஜூன் 2) கொண்டாடப்படுகிறது. அவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இளையராஜாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,” இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர்..இசைஞானி என்று தலைவர் கலைஞர் பட்டம் சூட்டினார்.அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும். ராஜா என்றும் ராஜாதான்” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *