பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (ஜூன் 10) அதிகாலை அவர் காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று காலை பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அத்துடன் பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இது இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும்  அடைந்தேன். கிராமியப் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் பாரதிராஜா. வரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். திரைத்துறையில் பாரதிராஜாவின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை. வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்..

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலுக்கு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து உள்பட திரையுலகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *