
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பிறகு தனது முதல் பிறந்தநாளை இன்று ( ஜூன் 22) கொண்டாடுகிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும், ரசிகர்களும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இதனிடையே முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, பொதுமக்கள் இலவசமாக வண்டலூர் உயிரியல் பூங்காவைப் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் விஜய்க்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். முதலமைச்சர் விஜய் நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டி,டி,வி,தினகரன்,அண்ணாமலை உள்பட பலர் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.



