
இந்தியாவின் முதல் தனியார் சுற்றுவட்ட ராக்கெட்டான ‘விக்ரம்-1 ’ விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் விண்வெளி மையத்தின் முதல் தளத்தில் இருந்து இன்று (ஜூலை 18) ‘விக்ரம்-1 ’ ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. இந்தியாவின் முதல் தனியார் சுற்று வட்ட ராட்கெட்டான ‘விக்ரம்-1 ’ ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த ராக்கெட் மிஷன் ஆகமன் என்னும் ஏவுதல் திட்டத்தின் படி ஏவப்பட்டுள்ளது. முதலில் இந்த ராக்கெட் இன்று காலை 11:30 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. ஆனால் தொழிற்நுட்ப கோளாறு காரணமாக ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்டு மதியம் 12:05 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ராக்கெட்டை ஏவிய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.



