நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் போராட்டம்

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமை மற்றும் விவசாயக்கடன் தள்ளுபடி தொடர்பாக திமுக சார்பில் நேற்று (ஆக.3) நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சையாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக தவெக அளித்த புகாரின் பேரில் இன்று(ஆக.4) காலை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் வைத்து தஞ்சை கிழக்கு போலீஸார் கைது செய்தனர். அத்துடன் தஞ்சாவூருக்கு உதயநிதி ஸ்டாலினை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.

இந்த நிலையில், உதயநிதியின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவது திமுகவினர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர். அவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதும் திமுக எம்.பிக்கள் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *