
தமிழ்நாட்டுக்கு 9,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 56வது கூட்டம் இன்று (ஆக.25) நடைபெற்றது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை அளவு, வானிலை நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்பட்ட நீர் விவகாரம், பற்றாக்குறை நீர் விவகாரம் தொடர்பாகவும், காவிரி ஆணையத்தின் முந்தைய உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதா உள்ளிட்டவை குறித்தும் விவாதம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 9,000 கன அடி நீர் என்ற அடிப்படையில் அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் நிராகரித்தது. தமிழ்நாட்டுக்கு காவிரியில் 15 நாட்களுக்கு கர்நாடக நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



