இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… அபிஜித் தீப்கே கருத்து

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி( சிஜேபி) நிறுவனர் அபிஜித் தீப்கே கருத்து தெரிவித்துள்ளார்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி( சிஜேபி) நிறுவனர் அபிஜித் தீப்கே தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது அபிஜித் தீப்கேவிடம், ‘ நாட்டின் சிறந்த முதலமைச்சர் யார்’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அபிஜித், மு.க. ஸ்டாலின், பினராயி விஜயன், அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகச் சிறப்பாகப் பணியாற்றினார். பினராயி விஜயன் கேரளாவின் சுகாதார மேம்பாட்டிற்காகவும், அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லியின் கல்வி மேம்பாட்டிற்காகவும் சிறப்பாகச் செயல்பட்டனர் என்று தெரிவித்தார்.

அவரின் இந்த கருத்து பல்வேறு தரப்பினரிடமிருந்து வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், அபிஜித்தின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் முன்னாள் நிர்வாகி பூனாவாளா, “நாட்டின் சிறந்த முதலமைச்சர்கள் மு.க. ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் என்றால், பின்னர் மக்கள் ஏன் அவர்களை நிராகரித்தார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *