
நிதி முறைகேடு குற்றச்சாட்டில் கர்நாடக அமைச்சர் நாகேந்திரா அவரது பதவியை இரண்டாவது முறையாக ராஜினாமா செய்துள்ளார்.
பழங்குடியினத்தைச் சேர்ந்தவரான முன்னாள் அமைச்சர் நாகேந்திரா கர்நாடகாவில் உள்ள குட்லிகி தொகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு பாஜக சார்பிலும், அதனைத்தொடர்ந்து 2013-ம் ஆண்டில் சுயேச்சை வேட்பாளராகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்னர், 2018-ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு பெல்லாரி தொகுதியில் இரண்டு முறை போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. இதில் அவர் வெற்றி பெற்றார்.
கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா இருந்த போது அவரது அமைச்சரவையில் பழங்குடியினர் நலன், விளையாட்டு துறை அமைச்சராக நாகேந்திரா இருந்தார். அப்போது கர்நாடக மகரிஷி வால்மீகி பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.89 கோடி ஊழல் முறைகேடுகளில் தொடர்புடையதாக கர்நாடகத்தின் எதிர்க்கட்சியான பாஜக, தொடர்ந்து கூறிவந்தது.
இந்த நிலையில், 2024 மே மாதத்தில் கர்நாடக மகரிஷி வால்மீகி பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரி சந்திரசேகரன் திடீரென தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்தே இந்த ஊழல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில், 2024-ம் ஆண்டில் தனது பதவியை நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ விசாரணை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாகேந்திராவை, அமலாக்கத்துறை கைது செய்தது. 4 மாதங்கள் சிறையில் இருந்த அவர், கடந்த 2024 -ம் ஆண்டு கடைசியில் வெளியே வந்தார். கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்ற டிகே சிவக்குமார் தலைமையில், நாகேந்திரா ஆகஸ்ட் 3-ம் தேதி மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு, புள்ளியியல் துறை அவருக்கு ஒதுக்கப்பட்டது. அவர் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 1-ம் தேதியில் இருந்து 10-ம் தேதி வரை ராய்ச்சூரில் இருந்து பல்லாரி வரை நடைபயணம் நடைபெறும் என்று கர்நாடகா பாஜக அறிவித்தது.
இந்த நிலையில், கர்நாடக அமைச்சர் நாகேந்திரா, தனது அமைச்சரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர். பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அப்போது அவர் கண்ணீர் சிந்திய காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நிதிமுறைகேட்டு புகாரில் நாகேந்திரா இரண்டாவது முறையாக பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



