டெல்லியில் பரபரப்பு: உச்ச நீதிமன்றத்தை நோக்கி காங்கிரஸ் இன்று பேரணி!

ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி உச்சநீதிமன்றத்தை நோக்கி காங்கிரஸ் கட்சியினர் இன்று பேரணி நடத்துகின்றனர்.

இந்திய தலைமைத் தேர்லதல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும், வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் ஜேசிபி கட்சியினர், மாணவர் அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரியும், வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை முன் வைத்தும் ராகுல் காந்தி தலைமையில் உச்சநீதிமன்றத்தை நோக்கி காங்கிரஸ் கட்சியினர் இன்று (அக்.12) பேரணி நடத்துகின்றனர். இளைஞர்கள், பல்வேறு சமூக அமைப்பினர் பேரணியாகச் சென்று, தலைமை நீதிபதியிடம் மனு அளிக்க உள்ளனர்.

இது தொடர்பாக சந்திப்புக்கு நேரம் கேட்டு, தலைமை நீதிபதி சூரியகாந்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் அனுப்பியிருந்தது. ஆனால், அவர்களின் கோரிக்கையை தலைமை நீதிபதி ஏற்க மறுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *