எல்.முருகன் ராஜினாமா: மாநிலங்களவை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

எல்.முருகன் ராஜினாமா செய்த மாநிலங்களவை இடத்துக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மத்திய இணை அமைச்சராக இருந்த எல்.முருகன் கடந்த அக்டோபர் 13-ம் தேதி தனது மத்திய அமைச்சர் பதவியையும், மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். அவர் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர் பதவி வகித்து வந்தார். தனது பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் எழுதியிருந்தார். அதில், தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்தும் பணிக்காக, முழுநேரமும் என்னை அர்ப்பணித்துக்கொண்டு, கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.

அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 26-ம் தேதி தொடங்குகிறது. வாக்குப்பதிவு நவம்பர் 12-ம் தேதி நடைபெறும், அன்றே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *