திண்டுக்கல்லில் ஷாக்… திமுக செயலாளரை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!

திமுக ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன்

திண்டுக்கல்லில் திமுக ஒன்றிய செயலாளரை இளைஞர் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் தெற்கு ஒன்றிய செயலாளராக வீரா.சாமிநாதன் என்பவர் உள்ளார். இவருக்கு சால்வை அணிவிக்க ஒரு இளைஞர் வந்துள்ளார்.
சால்வையை எடுத்த அந்த இளைஞர், அதற்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வீரா.சாமிநாதனின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் வீரா.சாமிநாதன் சாய்ந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். வீரா.சாமிநாதனை கத்திக்குத்தில் இருந்து காப்பாற்ற நாச்சிமுத்து என்பவர் முயற்சி செய்தார்.

அவரையும் இளைஞர் கத்தியால் குத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கத்திக்குத்தில் காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதன் பின் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வீரா.சாமிநாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த போலீஸார், விரைந்து வந்து கத்தியால் குத்திய இளைஞரை கைது செய்தனர். எதற்காக அவர் வீரா.சாமிநாதனை கொலை செய்ய முயன்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனிமனித விரோதத்தில் கத்தியில் குத்தினாரா அல்லது அரசியல் பின்னணியில் இந்த சம்பவம் நடந்ததா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

இப்போதே பகிருங்கள்

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *