
சென்னையில் காமராஜா் காலை உணவுத்திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் விரிவுபடுத்தப்படும் என தவெக அரசு அறிவித்திருந்தது.
இந்த திட்டத்தை சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு திட்டத்தை இன்று (செப்டம்பர் 22) தொடங்கி வைத்தார். மேலும் பள்ளிக்குழந்தைகளுக்கு உணவைப் பரிமாறியதுடன் அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார்.
இந்த திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் கூடுதலாக பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நிகழ் நிதியாண்டில் (2026-2027) ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்துக்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உள்ளது.



