உலகக் கோப்பை கால்பந்து போட்டி… ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து மெஸ்ஸி மேஜிக்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல்களை அடித்து அசத்தினார்.

ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடர் கடந்த ஜூன் 11-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஜெ பிரிவு போட்டியில் அர்ஜென்டினா, அல்ஜீரியா அணிகள் மோதின. நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா மோதிய முதல் போட்டி என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆட்டம் துவங்கிய 7 நிமிடத்தில் அல்ஜீரியா வீரர் ஃபேரஸ் சயிபி கோல் அடித்தார். ஆனால், ரிவீயூ மூலம் அந்த கோல் மறுக்கப்பட்டதால் அந்த அணி வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் 16வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி முதல் கோலை அடித்தார். இதன் தொடர்ச்சியாக 59 வது நிமிடத்திலும், 75வது நிமிடத்திலும் மூன்றாவது கோலை அடித்து மெஸ்ஸி அசத்தினார். இதன் மூலம் 3-0 கோல் என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை போட்டியில் தொடரில் தனது முதல் ஹாட்ரிக் கோலை மெஸ்ஸி நேற்று பதிவு செய்தார். இதன் மூலம் ஃபிபா தொடரில் 17 கோல்கள் அடித்த வீரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மிரோஸ்லவ் சாதனையை மெஸ்ஸி சமன் செய்தார். மேலும் உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் கோல் அடித்த மூன்றாவது சர்வதேச வீரர், முதல் அர்ஜென்டினா வீரர் என்ற சாதனையையும் மெஸ்ஸி படைத்துள்ளார். அத்துடன் அர்ஜென்டினா அணிக்காக தனது 200-வது சர்வதேச போட்டியில் பங்கேற்ற மெஸ்ஸி, இச்சாதனையை படைத்த மூன்றாவது வீரர் என்பது குறிப்பிடத்தக்து. அத்துடன் இது மெஸ்ஸி பங்கேற்கும் 6-வது உலகக் கோப்பையாகும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *