வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களைச் சேர்க்க சிறப்பு முகாம்

எஸ்ஐஆர் பணிகள் முடிந்த மாநிலங்களில் விடுபட்ட, புதிய வாக்காளர்களைச் சேர்க்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை மத்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதுவரை 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு வாக்காளர் திருத்தம் மூலம் 13 கோடி வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட சில மாநிலங்களில் வாக்காளர்களை திட்டமிட்டு தேர்தல் ஆணையம், பாஜகவுடன் இணைந்து நீக்கியதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதுடன் பல்வேறு மாநிலங்களில் அவருக்கு எதிராக போராட்டங்களும் நடந்து வருகிறது. இந்த நிலையில், சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் நீக்கப்பட்டவர்கள், விடுபட்டவர்கள் மற்றும் 18 வயதை கடந்த புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணியை தேர்தல் ஆணையம் மீண்டும் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பிஹார் மற்றும் மேற்கு வங்கம் உட்பட 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் ஏற்கெனவே முடிக்கப்பட்டுள்ளது. இந்த பணியின் போது அல்லது அதற்குப் பிறகு யாருடைய பெயர் விடுபட்டிருந்தாலும், இளம்/முதல்முறை வாக்காளர் உட்பட யாரேனும் ஒருவர், புதுப்பித்தல் செயல்முறையின் கீழ் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைச் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு வாக்காளர் திருத்தத்தின் போது அல்லது அதற்குப் பிறகு வெளியேறிய தகுதியுள்ள வாக்காளர்களை, படிவம் 6- ஐ பயன்படுத்தி தொடர்ச்சியான புதுப்பித்தல் செயல்முறையின் மூலம் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று அத்தகைய வாக்காளர்களைக் கண்டறிந்து அவர்களின் தற்போதைய நிலையைக் கண்டறிந்து படிவம் 6 மூலம் சேர்க்கையை எளிதாக்குவார்கள். இபிபணியை ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும்” என்று மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *