5 நாட்களில் 12 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2026-2027-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டும், ஆகஸ்ட் 6-ம் தேதி வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. அதன் பின்னர், பட்ஜெட் மீதான விவாதமும், துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதமும் நடைபெற்றன. இந்த விவாதத்துக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்தனர். செப்டம்பர் 8-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், கடைசி நாளில் 11 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மசோதாக்களில் தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டத்தில், மாநிலத்தில் உலகத் தரத்திலான தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதை எளிதாக்கும் வகையில், அவற்றுக்கான குறைந்தபட்ச நிலத் தேவையை 100 ஏக்கரில் இருந்து மண்டலங்களுக்கு ஏற்ப (சென்னையில் 12 ஏக்கர், பிற மாநகராட்சிகளில் 18 ஏக்கர், இதர பகுதிகளில் 25 ஏக்கர்) குறைக்கவும், நிரந்தர வைப்பு நிதியை ரூ. 50 கோடியில் இருந்து ரூ. 25 கோடியாகக் குறைக்கவும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. அத்துடன் விவசாய விளைபொருள் சந்தைப்படுத்துதல் (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கூடுதல் பணிகள்) திருத்தச் சட்டம், தமிழ்நாடு நிதி ஒதுக்கீட்டுச் சட்டம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் திருத்த மசோதா, ஊராட்சிகள் 2-ம் சட்ட திருத்த மசோதா, வணிக எளிதாக்கல் திருத்த மசோதா, மதிப்புக்கூட்டு வரி திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு கூட்டத்தொடர் முடிந்து 5 நாள்களுக்குள் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *