கீவ் மீது விடிய விடிய ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 2 பெண்கள் உயிரிழப்பு

ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் கீவ்வில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.

உக்ரைன் தலைநகர் மீது இன்று (ஆக.20) அதிகாலையில் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. குறிப்பாக கிவ் நகரத்தின் மீது விடிய விடிய ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குடியிருப்பு பகுதிகளும், கிட்டங்கி பகுதிகளும் தாக்கப்பட்டன.

இதில் 9வது மாடி குடியிருப்பின் மேல் தளங்கள் இடிந்து விழுந்ததுடன் தீ விபத்து ஏற்பட்டதாக கீவ் மேயர் விட்டாலி கிளிச்கோ டெலிகிராமில் எழுதியுள்ளார். இந்த தாக்குதலில் 6 பேர் காயமடைந்ததாகவும், இரண்டு பெண்கள் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *