எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது: விஜய்யை சாடிய மு.க.ஸ்டாலின்!

எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், அலுவலகத்தில் அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவது போன்ற புகைப்படமும், ஆங்கில கால நடைமுறைப்படி இருக்கையில் இருந்த வெள்ளைத் துண்டை அகற்றியது போன்ற செய்திகளும் இணையதளங்களில் வேகமாக பரவியது.

இந்த நிலையில், அலுவலகத்தில் அமர்ந்து சாப்பிடுவது போன்று வெளியானது செய்யறிவு புகைப்படம் என்றும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களும் வெள்ளைத் துண்டு போடாமல்தான் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள் என்று இணையதளங்களில் பதிலடி தரப்பட்டது.

இது தொடர்பாக ஆங்கில ஊடகம் வெளியிட்ட வீடியோ ஒன்றை திமுக ஊடகப்பிரிவு பகிர்ந்துள்ளது. அத்துடன் அதில், சகோதரரின் மாஃபியா ரீல்ஸ் தொழிற்சாலை முழுவதும் அம்பலமாகி விட்டது. துண்டு சாகசம் முதல் ஏ.ஐ மதிய உணவுப் பபுகைப்படம் வரை தவெகவினரின் போலிச்செய்தி பிரசாரங்கள் அனைத்துத் திசைகளில் இருந்தும் தோலுரிக்கப்பட்டு வருகின்றன என்று பதிவிட்டுள்ளனர்.

இதனை ஷேர் செய்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பலரைச் சில காலம் ஏமாற்றலாம். சிலரைப் பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்று பதிவிட்டுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *