
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமநாதரபுரம் மாவட்டம்,ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜேசுராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 4 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கை கடற்படை வீரர்கள் அங்கு வந்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதியும் எல்லை தாண்டி மீன்பிடித்தாக ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. இந்த நிலையில், மீண்டும் 4 மீனவர்களை கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று (ஏப்ரல் 14) முதல் ராமேஸ்வரம் கடற்பகுதியில் விசைப் படகில் மீன் பிடிக்க மீன் பிடித் தடை காலம் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



