அதிமுக ஷாக்… 38 தொகுதிகளைக் கேட்கும் பாஜக!

எடப்பாடி பழனிசாமியுடன், நயினார் நாகேந்திரன், எல்.முருகன்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்பதாக தகவல் பரவியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இரண்டு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் வேட்பாளர் தேர்வு, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி ஒதுக்கீடு, தேர்தல் அறிக்கையென அனைத்து கட்சிகளும் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளன. அதிமுக தலைமையிலான என்டிஓ கூட்டணியில் பாஜக. பாமக, தாமாக, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இன்னும் சில கட்சிகள் கூட்டணியில் இணையும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. ஆனால், நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு சட்டமன்றத் தொகுதி என்ற வகையில் சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே அன்புமணி தலைமையிலான பாமகவிற்கு 17 தொகுதிகளும், பாஜகவிற்கு 25 தொகுதிகளும் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 38 தொகுதிகள் வேண்டும் என்று பாஜக கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால், திமுகவிற்கு எதிராக அதிக தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறது. எனவே, பாஜக கேட்கும் தொகுதிகள் வழங்கப்படுமா என்பது சந்தேகம் தான் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், பிப்ரவரி 26- ம் தேதி தமிழகம் வருகைத்தர உள்ளார். அன்று அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அன்றைய தினம் தொகுதி எண்ணிக்கை குறித்து அதிமுகவிடம் பாஜக வலியுறுத்தும் என்று கூறப்படுகிறது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *