
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,
சசிகலா தொடங்கியுள்ள புதிய கட்சியுடன் கூட்டணியா என்பது குறித்து டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு நேற்று சென்றார். அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை 2 மணி நேரம் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசினார்.
இந்த நிலையில், டெல்லி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 3) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், * அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும். தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பேசினேன். தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் விவாதித்தேன்.
புதிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளது. அதிமுக கூட்டணி சுமூகமாக உள்ளது. திமுக கூட்டணியில் தான் குழப்பம் நிலவுகிறது.
சசிகலா தொடங்கியுள்ள புதிய கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து எதுவும் பேசவில்லை. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் விவாதிக்கவில்லை” என்றார்.



