காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் யார்?: மல்லிகார்ஜுனே கார்கே அறிவிப்பு!

ராகுல் காந்தியுடன் கிறிஸ்டோபர் திலக்.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி சார்பில் கிறிஸ்டோபர் திலக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இந்தியாவில் 37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அதற்கான தேர்தல் மார்ச் 16-ம் தேதி நடைபெறுகிறது.
அதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக, காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. அதில் 28 சட்டமன்றத் தொகுதிகளும், 1 மாநிலங்களவை சீட்டும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் வேட்பாளராக கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே அறிவித்துள்ளார். கிறிஸ்டோபர் திலக், அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக உள்ளார். திருச்சியை பூர்வீகமாக கொண்ட கிறிஸ்டோபர் திலக் மணிப்பூர், நாகலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *