
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் எல்.கே.சுதீஷ் மற்றும் தேமுதிக நிர்வாகி பார்த்தசாரதி.
மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக பொருளாளர் எல்கே சதீஷ் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்திருக்கிறார்.
இந்தியா முழுவதும் 37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் பதவிக்கால முடிவடைய இருக்கிறது. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் மார்ச் 16 -ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் இன்றுடன் நிறைவு செய்யப்பட உள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நடைபெறவிருக்கும் மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக வேட்பாளராக கட்சியின் பொருளாதார எல்.கே.சதீஷ் போட்டியிடுகிறார் என கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் எல்.கே.சுதீஷ் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் உடன்பிறந்த தம்பியாவார். இவர் கடந்த 2006-ம் ஆண்டு குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதன்பின் 2009 மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி, 2014-ம் ஆண்டு சேலம், 2019-ம் ஆண்டு மீண்டும் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தேமுதிக வரலாற்றில் முதல் முறையாக அக்கட்சி மாநிலங்களவை எம்.பியாகும் வாய்ப்பு திமுக கூட்டணியில் கிடைத்துள்ளது. இன்று அவருக்கு திருமண நாளாகும். அந்த நாளில் மாநிலங்களவை வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளரால் அறிவிக்கப்பட்டுள்ளார்.



