
கட்சி கொடியை அறிமுகப்படுத்திய வி.கே.சசிகலா.
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் வி.கே.சசிகலா புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த வி.கே.சசிகலா, ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் ஜெயலலிதா பிறந்தநாளான கடந்த பிப்ரவரி 24-ம் தேதி அவரது வி.கே.சசிகலா தனது கட்சியின் கொடியை அறிவித்தார். அப்போது, விரைவில் கட்சியின் பெயரை அறிவிப்பேன் என்று கூறினார்.
இந்த நிலையில், சென்னையில் தனது புதிய கட்சியின் பெயரை இன்று (மார்ச் 13) அறிவித்தார். அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என கட்சியின் பெயரை அறிவித்த அவர், கட்சியின் சின்னத்தையும் வெளியிட்டார். தங்கள் கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வி கே சசிகலா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வி.கே.சசிகலா செய்தியாளர்களிடம் கூறுகையில், * ஜெயலலிதா மறைவிற்கு பின்பு அனைத்தும் தலைகீழாக மாறி விட்டது. தொண்டர் ஆரம்பித்த கட்சியில் தன்னை இணைத்து கொண்டவர் எம்.ஜி.ஆர். வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.பு.த.ம.மு.க. தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவேன். வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்தே போட்டியிடுவேன். ஒத்த கருத்து கொண்ட கட்சிகளுடன் வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவேன்” என்றார்.



